Thursday, October 29, 2009

தற்காலிக குடிப்பெயர்ச்சி!


“Have you been to states before” ?
“No, Haven’t yet”. (எங்க..நமக்கு தெரிஞ்ச ஸ்டேட்ஸ் பெங்களூர், கேரளா அப்பறம் ஆந்திராதான்)
“Any other country” ?
“No”.
“What are you man, You have enough experience..Should have been to onsite atleast once”
“yeah…I could have been… But…”

-இந்த மாதிரி ஐடி இண்டஸ்ட்ரில ஒரு நாளைக்கு ஒரு ஒம்பது பேராவது ஒம்பது எடத்துல பேசிட்டு இருப்பாங்க..

அல்மோஸ்ட் என்னோட பிரண்ட்ஸ், பேட்ஜ் மேட்ஸ் எல்லாரும் ஆன்சைட்ல இருக்காங்க? நமகெங்க….எழவு அதுக்கெல்லாம் நேரங்காலம் வரணுங்கன்னு முக்குக்கு மூணு பேராவது மூக்கால அழுதுட்ருப்பாங்க..

ஏங்க…. நம்ப தம்பி இப்போ போறேன், அப்போ போறேன்னு சொல்லிகிட்டே இருக்காப்ல ஆனா ஒன்னும் போற மாறியே தெரியலையே, நம்ப அனந்தன் பையன் அமெரிக்கால இருக்கான், சகுந்தலா பொண்ணு சௌதில இருக்கான்னு”……!!!!
 

-சாயங்காலம் காப்பிய குடிச்சிட்டே வீட்டுக்கு வந்த ஒரம்பறை  அளபறைய குடுத்திட்டிருப்பாங்க

ஆன்சைட் - மென்பொருள் துறையினரின் வாழ்வில் தவிர்க்க முடியாத, மிகவும் அவசியமான, அத்யாவசியமான ஒரு வார்த்தை.

சரி ஆன்சைட்னா என்னாங்க?

Thursday, October 15, 2009

கேலி கூத்துகள்

நம் நாட்டின் சில கேலி கூத்துகள்









Wednesday, October 14, 2009

தமிழ் நாளேடு மற்றும் பத்திரிகைகள்



ஹைக்கூ - நட்பு

பழகும் முன்
"தனிமை"
பழகிய பின் 
"இனிமை"
பிரிந்த பின்
"கொடுமை"
பிரிந்ததால் தான் தெரிந்தது 
"நட்பின் அருமை"

ஹைக்கூ - பெண்கள்

வார்த்தை தடுமாற
காரணம்
கண்கள் ......
வாழ்கை தடுமாற
காரணம்
பெண்கள் .....!!!!!!!

சூடான பஜ்ஜி


தேவையான பொருட்கள்:-
கடலைமாவு - 2 கப்
மிளகாய்தூள் - 1 மேஜைகரண்டி
சோடாஉப்பு - சிறிது
பெருங்காயத்தூள் - சிறிது
கலர்பொடி - சிறிது
உப்பு - தேவையான அளவு
கத்திரிக்காய் - 1
பெரிய வெங்காயம் -1
வாழைக்காய் - 1
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

 செய்முறை :-

1. கடலைமாவு, மிளகாய்தூள், சோடாஉப்பு, பெருங்காயத்தூள், கலர்பொடி, உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து தோசைமாவுக்கு கரைப்பது போல் கரைத்துக் கொள்ளவும்.

2. பிறகு உங்களுக்கு பிடித்தமான காய்கறிகளை மிகவும் மெலிதாக வெட்டி, பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்தவுடன் நறுக்கிய காயை மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும்.

3. பஜ்ஜி உப்பி வந்தவுடன் எடுத்து விருப்பமான சட்னியுடன் பரிமாற வேண்டியதுதான். கரகர மொறு மொறு பஜ்ஜி தயார்...!

 

தமாசு