Sunday, November 22, 2009

கணிபொறிக்கு தேவையான அனைத்து டிரைவர்களும் ஒரே இடத்தில் கிடைக்கிறது

நாம் எந்த ஒரு வன்பொருள் ( Hardware ) சாதனங்களை வாங்கினாலும் கூடவே அதற்கூறிய Driver Cd அல்லது Dvd தருவார்கள். அனைத்து

சில சமயங்களில் நம் Driver Cd (or) Dvd அடிபட்டு விடும் அல்லது தொலைந்து போகக்கூடிய வாய்பு நிறைய உள்ளது.அந்த சமயங்களில் நாம் நமக்கு தேவைப்படும் Driver Cd (or) Dvd-யை எங்கு சென்று வாங்குவது?யாரிடம் கேட்பது?

இந்த கவலையை விட்டு விடுங்கள் இந்த இணையத்தளம் நமக்கு தேவையான அனைத்து Driver Cd (or) Dvd-களையும் தருகிறார்கள்,இங்கு சென்று நாம் நமக்கு தேவையான Driver Cd (or) Dvd-களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இங்கு

* PrinterDrivers

* Cdrom Dreivers

* Modem Drivers

* Sound Drivers

* Mouse Drivers

* Monitor Drivers etc.........

அனைத்து Company சாதனங்களும்(Driver) கிடைக்கிறது.பழைய சாதனகளுக்கும் டிரைவர்கள் உள்ளன.



உங்களுக்கு தேவையான Driver Cd (or) Dvd-களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தள முகவரி http://members.driverguide.com/index.php

Saturday, November 21, 2009

புளியோதரை - கோயில் பிரசாதம்

தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 5 கப்
நல்லெண்ணை – 50 கிராம்
மிளகு – 200 கிராம்

புளிக்காய்ச்சல் தயாரிக்க
புளி – 100 கிராம்
நல்லெண்ணை – 100 கிராம்
கடலைப் பருப்பு – 100 கிராம்
உளுத்தம் பருப்பு – 100 கிராம்
வெந்தயம் – 10 கிராம்
சீரகம் – 5 கிராம்
கடுகு – 10 கிராம்
பெருங்காயம் – சிறிது
முந்திரிப்பருப்பு – 50 கிராம்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள் – 10 கிராம்

செய்முறை:

  • புளிக்காய்ச்சலை முதல்நாளே செய்துவைக்க வேண்டும்.
  • புளியை கெட்டியாகக் கரைத்துவைத்துக் கொள்ளவும்.
  • நல்லெண்ணைய வாணலியில் வைத்து, அடுப்பை மெதுவாக எரிய விடவேண்டும்.
  • எண்ணை காய்ந்ததும், அதில் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் என்ற வரிசையில் போட்டு நன்றாகச் சிவக்க வறுக்கவும்.
  • பின்னர் அதில் முந்திரிப் பருப்பையும் வறுத்துக் கொண்டு, கெட்டியாக கரைத்துவைத்துள்ள புளியைச் சேர்க்கவும்.
  • 2 நிமிடம் கொதித்தவுடன், உப்பு, மஞ்சள்பொடியைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
  • புளிநீர் பாதியாக வற்றும்வரைக் கொதிக்கவிட்டு, இறக்கி எடுத்துவைக்கவும். [மறுநாள் புளிக்காய்ச்சலைத் திறந்ததுமே கும்'மென்று மணமாக இருக்கவேண்டும். சரியாகக் காய்ச்சவில்லை என்றால் புளியின் பச்சை வாசனை வரும்.]
  • மறுநாள் பச்சரிசியை உதிர் உதிராகச் சமைத்து, ஒரு அகலமான தட்டில் அல்லது பாத்திரத்தில் பரத்தி இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணை சேர்த்து ஆறவிட வேண்டும்.
  • சாதம் ஆறியதும், கொஞ்சம் கொஞ்சமாக புளிக்காய்ச்சலைக் கலக்க வேண்டும்.
  • பின்னர் தேவையான அளவு பொடி செய்யப்பட்ட மிளகை, 50 கிராம் நல்லெண்ணையோடு கலந்து, அதையும் சாதக் கலவையில் சேர்த்துக் கலக்க வேண்டும்.

Thursday, October 29, 2009

தற்காலிக குடிப்பெயர்ச்சி!


“Have you been to states before” ?
“No, Haven’t yet”. (எங்க..நமக்கு தெரிஞ்ச ஸ்டேட்ஸ் பெங்களூர், கேரளா அப்பறம் ஆந்திராதான்)
“Any other country” ?
“No”.
“What are you man, You have enough experience..Should have been to onsite atleast once”
“yeah…I could have been… But…”

-இந்த மாதிரி ஐடி இண்டஸ்ட்ரில ஒரு நாளைக்கு ஒரு ஒம்பது பேராவது ஒம்பது எடத்துல பேசிட்டு இருப்பாங்க..

அல்மோஸ்ட் என்னோட பிரண்ட்ஸ், பேட்ஜ் மேட்ஸ் எல்லாரும் ஆன்சைட்ல இருக்காங்க? நமகெங்க….எழவு அதுக்கெல்லாம் நேரங்காலம் வரணுங்கன்னு முக்குக்கு மூணு பேராவது மூக்கால அழுதுட்ருப்பாங்க..

ஏங்க…. நம்ப தம்பி இப்போ போறேன், அப்போ போறேன்னு சொல்லிகிட்டே இருக்காப்ல ஆனா ஒன்னும் போற மாறியே தெரியலையே, நம்ப அனந்தன் பையன் அமெரிக்கால இருக்கான், சகுந்தலா பொண்ணு சௌதில இருக்கான்னு”……!!!!
 

-சாயங்காலம் காப்பிய குடிச்சிட்டே வீட்டுக்கு வந்த ஒரம்பறை  அளபறைய குடுத்திட்டிருப்பாங்க

ஆன்சைட் - மென்பொருள் துறையினரின் வாழ்வில் தவிர்க்க முடியாத, மிகவும் அவசியமான, அத்யாவசியமான ஒரு வார்த்தை.

சரி ஆன்சைட்னா என்னாங்க?

Thursday, October 15, 2009

கேலி கூத்துகள்

நம் நாட்டின் சில கேலி கூத்துகள்









Wednesday, October 14, 2009

தமிழ் நாளேடு மற்றும் பத்திரிகைகள்



ஹைக்கூ - நட்பு

பழகும் முன்
"தனிமை"
பழகிய பின் 
"இனிமை"
பிரிந்த பின்
"கொடுமை"
பிரிந்ததால் தான் தெரிந்தது 
"நட்பின் அருமை"

ஹைக்கூ - பெண்கள்

வார்த்தை தடுமாற
காரணம்
கண்கள் ......
வாழ்கை தடுமாற
காரணம்
பெண்கள் .....!!!!!!!

சூடான பஜ்ஜி


தேவையான பொருட்கள்:-
கடலைமாவு - 2 கப்
மிளகாய்தூள் - 1 மேஜைகரண்டி
சோடாஉப்பு - சிறிது
பெருங்காயத்தூள் - சிறிது
கலர்பொடி - சிறிது
உப்பு - தேவையான அளவு
கத்திரிக்காய் - 1
பெரிய வெங்காயம் -1
வாழைக்காய் - 1
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

 செய்முறை :-

1. கடலைமாவு, மிளகாய்தூள், சோடாஉப்பு, பெருங்காயத்தூள், கலர்பொடி, உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து தோசைமாவுக்கு கரைப்பது போல் கரைத்துக் கொள்ளவும்.

2. பிறகு உங்களுக்கு பிடித்தமான காய்கறிகளை மிகவும் மெலிதாக வெட்டி, பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்தவுடன் நறுக்கிய காயை மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும்.

3. பஜ்ஜி உப்பி வந்தவுடன் எடுத்து விருப்பமான சட்னியுடன் பரிமாற வேண்டியதுதான். கரகர மொறு மொறு பஜ்ஜி தயார்...!

 

தமாசு